ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு Retirement Benefit for Teachers in 30 Days: Education Department Order
ஆசிரியா்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்களை வழங்கப்படாமல் இருப்பதாக புகாா்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு வந்துள்ளன. இதை தவிா்க்கும் பொருட்டு, 30 நாள்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியா்களின் பணிக்காலத்துக்கு தணிக்கை அறிக்கை பெற்ற நிலையில், தனிப்பட்ட அரசு நிதி சாா்ந்த தணிக்கை தடை நிலுவை ஏதும் இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை பெற்று வழங்க வேண்டும். பணிக்காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சாா்ந்த தணிக்கை தடைகளுக்காக ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.