BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு தண்டனை வழங்கி அதனை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 28, 2024

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு தண்டனை வழங்கி அதனை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு..


தன் உடல் நலம் கருதி BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்"* *என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு


BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு தண்டனை வழங்கி அதனை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு..

காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி செயல்முறைகள்.

முன்னிலை-திரு.அதனி.எம்.எம்.பிக்சம்.பாட்ட 5.54/M02023 Bash.03.2024.

பொருள் தொடக்கக் கல்வி வாக்குச்சாவடி நிலை அலுவபணி தமிழ்நாடு குடிமுறை பணிகள் விதி 176) இன் கீழ் விளக்கம் கோரப்பட்டணம் - ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட தன்னிலை விளக்கக் கடிதங்கள் சார்த்து காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ! ஆணையாளர் கடிதம் ந.கண் 0436/2021/எப், நாள்.13.09.2023. 2. இவ்வலுவலக இதே எண்ணிட்ட விளக்கம் கேட்டும் குறிப்பாணை நாள்.26.00.2023. 3. காஞ்சிபுரம், வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம் நகாண் 2035/M/2023, p.17.11.2023.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம். பெரிய காஞ்சிபுரம், சிளய்து நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி.க.கனிதா என்பவர் பார்வை (1) இல் காணும் கடிதத்தின்படி (ILO) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு, மேற்படி பணியினை செய்யாமைக்கான காரணத்தை அளிக்குமாறு பார்வை (2) இல் காணும் இவ்வலுவலக விளக்கம் கேட்கும் குறிப்பாணை மூலமாக தமிழ்நாடு குடிமுறை பணிகள் (ஒழுங்குமுறையும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17 இன்கீழ் விளக்கம் கோரப்பட்டு கீழ்க்காணும் ஆசிரியர் தனது தன்னிலை விளக்கத்தினை பார்வை (3) இல் காணும் கடிதத்தின்படி, விளக்கக் கடிதம் இவ்வலுவலகம் பெற்றப்பட்டது.

மேற்படி விளக்கக் கடிதம் அளித்துள்ள ஆசிரியர் தன்னுடைய உடல் நிலை சார்ந்து பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் BLO பணியிலிருந்து விளக்கு அளிக்க கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்படி ஆசிரியரை BLO பணியிலிருந்து விளக்கிட எந்தவிதமான ஆணையும் தொடர்புடைய அலுவலரால் வழங்கவில்லை. ஆனால் தாங்களாகவே BLO பணியை செய்ய மறுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்ணிற்கு சென்று தேர்தல் பணியினை செய்யவில்லை எனவும் உயர் அலுவலரால் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட தேர்தல் பணியின் அவசரம் கருதி மெத்தனப்போக்கோடு ஆசிரியர் செயல்பட்டது தெள்ளத்தெளிவாகிறது.

இந்நிலையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதியில் "THE RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT, 2000 No.as of 2009 Dated 26.08.2009 24 CHAPTER IV (RESPOSIBILITIES OF SCHOOLS AND TEACHERS) விதிகளில் உள்விதி 27 இல் No teacher shall be deployed for any non- educational purposes other than the decennial population census, disaster relief duties or duties relating to elections to the local authority or the State Legislatures or Parliament, as the case may be" என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17 (அ) இன் கீழ் வழங்கப்பட்ட குறிப்பாணைக்கு விளக்கம் அளித்துள்ளது ஏற்கஇயலாது எனவே கீழே கையொப்பமிட்ட அலுவலரால் "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அவ்வாறே ஆணையிடப்படுகிறது. மேற்படி கண்டனம் என்ற விவரத்தினை அன்னாரின் பணிப்பதிவேட்டில் பதிவுகள் செய்யப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தொடர்புடைய பள்ளி தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.