மீண்டும் ஈட்டிய விடுப்பு - விரைவில் வருகிறது அரசாணை? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 11, 2024

மீண்டும் ஈட்டிய விடுப்பு - விரைவில் வருகிறது அரசாணை?



மீண்டும் ஈட்டிய விடுப்பு - விரைவில் வருகிறது அரசாணை?

ஈட்டிய விடுப்பு- அரசுக்கு ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ள 1.4.2024 முதல் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது ஈட்டிய விடுப்பை சரண் செய்து அதற்கு ஈடான பண பலன்களை பெற்று வந்தனர். இடையே கொரோனா பேரிடர் காலத்தில் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் நடைமுறை நிதிநிலை காரணமாக நிறுத்தப்படுவதாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பல்வேறு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்புகள் அரசுக்கு பல்வேறு நிதி சார்பான கோரிக்கைகள் வைத்து வந்தன. அதில் ஒரு கோரிக்கையான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளதாகவும் இதற்காக அரசாணை விரைவில் பிறப்பிக்க உள்ளதாகவும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாடுகள், உயர்கல்வி ஊக்க ஊதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும் என்று காத்திருந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நம்பிக்கை பெற அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

விரைவில் இதற்கான அரசாணை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே வெளியிடப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.