பொதுத் தேர்வு: ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 11, 2024

பொதுத் தேர்வு: ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள்



பொதுத் தேர்வு: ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள்

தமிழகத்தில் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத் தும் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது.அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. நிக ழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர் வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 முதல் 13-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 25-ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

அதேபோல், 10-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 12 முதல் 22-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். அவை நிறைவ டைந்த பிறகு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதன்பின்னர், பிளஸ் 2 தேர்வு முடி வுகள் மே 6, பிளஸ் 1 முடிவுகள் மே 14, 10-ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளன. இதையும் படிக்க | 10th Paper Valuation Camp Schedule - 2024

இதையும் படிக்க | 11th Paper Valuation Camp Schedule - 2024

இதையும் படிக்க | 12th Paper Valuation Camp Schedule - 2024

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.