வேதியியல் வினாத்தாள் பரவாயில்லை; சென்டம் வாய்ப்பு குறைவு தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து  - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 11, 2024

வேதியியல் வினாத்தாள் பரவாயில்லை; சென்டம் வாய்ப்பு குறைவு தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து 



வேதியியல் வினாத்தாள் பரவாயில்லை; சென்டம் வாய்ப்பு குறைவு தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒரு சில புத்தகத்திற்கு உள்ளே இருந்து கேட்கப்பட்டதால் இந்த முறை சென்டம் வாய்ப்பு குறையலாம் என்றும், மற்ற பிரிவுகளில் வினாக்கள் எளிமையாக இருந்ததால் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெறுவதும் அதிகரிக்கலாம் என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர். சென்டம் குறையலாம் எம்.புவனேஸ்வரி, ஆசிரியர், ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்:

ஒரு மதிப்பெண் வினாக்களில் நான்கு மட்டும் புத்தகத்திற்கு உள்ளே இருந்து கேட்கப்பட்டன. நன்கு பயிற்சி எடுத்த, ஆழமாக படித்த மாணவர்கள் நிச்சயம் பதில் அளித்து விடுவர். மற்ற மாணவர்களுக்கு சிரமம் தான். இருப்பினும் 5 மதிப்பெண் வினாக்களில் ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. இரண்டு, மூன்றுமதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் எடுப்பது எளிது. ஆனால் சென்டம் குறையலாம். மற்றபடி வேதியியல் தேர்வு எல்லா ஆண்டுகளை போல பரவாயில்லை என்று தான் கூற வேண்டும், என்றார்.

ஆர். முனீஸ்வரன், நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்:

15 ஒரு மதிப்பெண் கேள்விகளில் 10 கேள்விகள் புத்தகத்திற்கு பின்னால் இருந்தும், 2 கேள்விகள் புத்தக பின்னால் இருந்த கேள்விகளை சிறிது மாற்றியும், 3 கேள்விகள் புத்தகத்திற்கு உள்ளே இருந்தும் கேட்டுள்ளனர். 5 மதிப்பெண் கேள்வியில் ஒன்று புத்தகத்தின் பின்னால் இருந்தும், இன்னொன்று உள்ளே இருந்தும் கேட்டுள்ளனர். இரண்டு, ஐந்து மதிப்பெண்கள் கேள்விகள் கோட்பாடுகளாக கேட்கப்பட்டதால் சிறிது சிரமமாக இருந்தது. இந்த தேர்வில் நன்றாக படிப்பவர்கள் கூட சென்டம் எடுப்பது கஷ்டம். 70 சதவீதம் புத்தகத்தின் பின்னால், 30 சதவீதம் உள்ளே இருந்துமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. விஜயபிரபா, மாணவி, தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை :

தேர்வு சுலபமாக இருந்தது. மெல்ல கற்கும் மாணவர்கள் கூட அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் வினாத்தாள் எளிமையாக இருந்தது. 1, 2, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் பாட புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. முக்கியமான வினாக்கள் என்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு வேதியல் பாடத்தில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது. திருப்பு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும் இருந்தன. நாங்கள் எதிர்பார்த்த முக்கியமான கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது.

---உள்ளிருந்து கேள்விகள்

ஜாய்சன் டேவிட், எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்:

ஒரு மதிப்பெண் பகுதியில் 6 கேள்விகள் வரை யோசித்து எழுதுவது போல் இருந்தது. எதிர்பார்த்ததை விட புத்தகத்தின் உள்ளிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இரண்டு மதிப்பெண் கேள்விகளிலும் இரண்டு கேள்விகள் இதே போல் இருந்தது. மூன்று மதிப்பெண்ணில் சுலபமாக எழுதும் வகையிலும், ஐந்து மதிப்பெண் கேள்வியில் ஒன்று கடினமாகவே கேட்கப்பட்டது. முழு மதிப்பெண் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். சுலபமான வினாத்தாள் என்று கூற முடியாது.

கட்டாய வினாக்கள் கடினம்

அமிர்த லட்சுமி, ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, சிவகாசி:

புத்தகம் முழுவதையும் முழுமையாக படித்திருந்தால் எளிதில் சென்டம் வாங்கி விடலாம். சராசரியாக படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்ணை தாண்டி விடலாம்.

இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்களில் சில கடினமாக இருந்தாலும், சாய்ஸ் இருப்பதால் விடை அளிக்க எளிதாக இருந்தது.

மூன்று மதிப்பெண் வினாவில் கட்டாயமாக விடை அளிக்கும் வினா மட்டும் சற்று கடினமாக இருந்தது. மொத்தத்தில் இந்த தேர்வு எளிமையாக இருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.