நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 114 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - DEE செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 5, 2024

நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 114 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - DEE செயல்முறைகள்



நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 114 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - DEE செயல்முறைகள் Publication of 114 newly created graduate teacher post positions in secondary schools - DEE Proceedings

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

B.π.ετόπ. 009015/ 2 / 2022, лет, 03.2024. பொருள்

தொடக்கக் கல்வி - அறிவிப்புகள் 2023 2024 -மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் " இன்படி அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவித்து வெளியிடப்பட்டது - தொடர்பாக. ஆணை பார்வை:

அரசாணை (நிலை) எண்.54, பள்ளிக் கல்வித்(தொக3(2)) துறை πίτ. 28.02.2024.

2023-2024 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு " 6 முதல் 8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று எனக் குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கப்படும் "என வெளியிடப்பட்டது.

மேற்சொன்ன அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பார்வையில் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வரசாணையில் அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 175 மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் மற்றும் 6 முதல் 8ஆம் வகுப்பில் தலா 35 மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் என இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தோற்றுவிக்கப்பட்ட பாடங்களுக்கான பணியிடங்களை தவிர்த்து மீதம் உள்ள பாடத்திற்கு கூடுதலாக 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேவையின் அடிப்படையில் பாடவாரியாக தோற்றுவிக்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்சொன்ன 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் இணைப்பில் கண்டுள்ளவாறு இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி புதியதாகப் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவை பதிவேட்டில் பதிவு செய்து பராமரித்திட சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

இணைப்பு- பள்ளிகளின் பெயர் பட்டியல்.

CLICK HERE TO DOWNLOAD 114 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் DEE செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.