நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 3, 2024

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்



Publication of State Level Priority List of Middle School Principals - DEE Proceedings - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06

முன்னிலை : முனைவர்.ச.கண்ணப்பன் 15.5.στοι. 000030/01/2024, пот 01.2024

பொருள் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் 01.01.2024 πύις 31.12.2022 ला BEσυμर्बी ली தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் அளவிலான உத்தேச முன்னுரிமைப் வெளியிடுதல் - தொடர்பாக மாநில பட்டியல்

பார்வை அரசாணை (நிலை) எண்.12. பள்ளிக் கல்வித் (தொ.க.1(1)) . . 30.01.2020 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் வகுப்பு 1 வகை 2 இல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் உள்ளது. 01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.

இவ்வுத்தேச மாநில முன்னுரிமைப் பட்டியலை அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாநில முன்னுரிமைப் பட்டியலில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர். பிறந்த தேதி, ஒய்வு பெறும் தேதி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த நாள் (முற்பகல்/பிற்பகல்), பணியாற்றும் மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர். தலைமையாசிரியர்களுக்கான EMIS ID மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரியும் பள்ளியின் UDISE code ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இப்பட்டியலில் மேற்கண்ட விவரங்களில் ஏதேனும் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஆகியவை இருப்பின் சார்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து உரிய விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் திருத்தம், சேர்க்கை, நீக்கம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய திருத்தம் செய்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் இறுதி மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு -01.01.2024 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் உத்தேச மாநில முன்னுரிமைப் பட்டியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.