ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்தது ஜாக்டோ ஜியோ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 19, 2024

ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்தது ஜாக்டோ ஜியோ

ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்தது ஜாக்டோ ஜியோ Jacto Geo announced the livelihood struggles

நியாயங்களையும் புரிந்த , எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே எங்கள் நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும்.

உரிமைகள் தரமறுக்கும் இடங்களில் போராட்டங்களை கையிலெடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை . நாங்களும் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் தமிழ்நாடு முதல்வர் எங்களை அழைத்துப் பேசாததும் , கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும் எங்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது. இரண்டரை ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இனிமேலும் பொறுமையோடு காத்திருப்பது அர்த்தமற்றது என உணர்ந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கீழ்க்கண்ட ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்ததுள்ளது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கொண்டுவருகிறாம்.

போராட்ட அட்டவண

1. 22.01.2024 ឆ្ងល់ 24.01.2024 மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம் நடத்துவது.

2. 30.01.2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது. 3. 05.02.2024 gល់ 09.02.2024

அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது (பி.ஜே.பி., அ.தி.மு.க. தவிர்த்து).

4. 10.02.2024 அன்று மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது.

5. 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது.

6. 26.02.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது

இப்போதாவது எங்களை நேரில் அழைத்து எங்கள் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையேனும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்கள் இதயத்தில் உள்ளது.

எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் கீழ்க்கண்ட எங்கள் முக்கிய கோரிக்கைகளை பரிசீலித்து நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இயலாத பட்சத்தில் நாங்கள் போராட்ட களத்தில் நிற்பது தவிர்கக இயலாததாகிவிடும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.