கல்வி அலுவலர்கள் செயல்முறை ஆணைகள் வழங்கும் போது முழுமையாக தேதி குறிப்பிட்டு வெளியிட வேண்டும் - DSE & DEE இணைச் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்
பொருள்:
பள்ளிக் கல்வி - கல்வி அலுவலர்கள் வழங்கும் செயல்முறை ஆணைகள் முழுமையாக தேதி குறிப்பிட்டு ஆணை வெளியிடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வித் துறை அலுவலர்களின் செயல்முறை ஆணைகளை எதிர்த்து தொடரப்பட்ட நீதிப்பேராணை வழக்குகளில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்முறை ஆணைகள் வழங்கப்படும் போது தேதி மாதம் ஆண்டு (Date Month -Year) exer ஆணை வெளியிடப்படும் நாளினை முழுமையாக குறிப்பிடாமல் மாதம் மற்றும் ஆண்டுடன் ஆணை வெளியிடப்படும் நேர்வுகள் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டு சரியான முறையில் தேதியினை முழுமையாக குறிப்பிட்டு ஆணை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை விதிகளின்படி, செயல்முறை ஆணைகளில் ஆணை வெளியிடப்படும் நாளினை முழுமையாக குறிப்பிடப்பட்டு (தேதி மாதம் ஆண்டு) ஆணை வழங்கப்பட வேண்டும். மேலும், செயல்முறை ஆணை வழங்கும் அலுவலர் பெயருடன் முழுமையான வடிவில் ஆணை வெளியிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இச்செயல்முறை ஆணையினை தங்கள் நிர்வாகக்கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிப்பதுடன், இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அனைத்து செயல்முறை ஆணைகளிலும் தேதி மாதம் ஆண்டு என ஆணை வெளியிடப்படும் நாள் விவரங்கள் முழுமையாக இடம் பெற்றிருப்பதை உறுதிபடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.