செய்தியாளர் அழைப்பு
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்லூரிக் களப் பயணம்
- தொடக்க விழா -
இடம் : கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை
நாள்: 16.11.2023, நேரம் : காலை 10 மணி
நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கடந்த 2022–2023 கல்வி ஆண்டில் கல்லூரி களப்பயணம் (Exposure Visit to Higher Education Institutions). மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக நடைபெற்றது. பள்ளிகளுக்கு அருகமையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கல்லூரி களப் பயணத்தின் அனுபவம் மாணவர்களின் உயர்கல்வி குறித்த அச்சம் / குழப்பங்களை களைந்து, உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கியது. இதன் விளைவாக கடந்த மே மாதம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வ மாணவர்கள் மற்றும் பிற உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களின் உதவியுடன் உயர் கல்விக்கு மாணவர்கள் பெருமளவில் விண்ணப்பித்தனர்.
இக்கல்வியாண்டிலும் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனைடையும் வகையில் மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலில் கல்லூரி களப்பயணம் (Exposure Visit) 16.11.2023 தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர்களால் பரிந்துரைக்கப்பட்ட 456 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் இக்கல்லூரி களப் பயணத்தினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 16.11.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியில் தொடங்கி வைக்கிறார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.