அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 24.11.2023, 25.11.2023 மற்றும் 26.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 10, 2023

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 24.11.2023, 25.11.2023 மற்றும் 26.11.2023

பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 24.11.2023, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் - கூட்ட பொருள் விவரம் கோருதல் சார்ந்து,

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி செயலர் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 24.11.2023, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் தலைமையிடத்தில் பணிபுரியும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களும் கலந்துகொள்ள வேண்டும்.

இக்கூட்டம் சார்ந்து தங்களது அலகிற்குட்பட்ட கூட்டப் பொருட்கள் விவரங்களை தயாரித்து இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களுக்கு Hard Copy வழங்கவும் மற்றும் "பிடி 1" பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் pd1sec.dse@gmail.com என்ற முகவரிக்கு 15.11.2023 மாலை 4.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.