இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை ஏற்றும் போராட்டத்தை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 5, 2023

இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை ஏற்றும் போராட்டத்தை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி ~~~~~~ சம வேலைக்கு சம ஊதியம் வழங்க போராடும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் வேண்டுகோள் ~~~~~~~ கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல் 2009 ஜூன் 1 ந்தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யவும், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கோரியும் ,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு நடத்துவதை ரத்து செய்யவும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்புட்டு வந்தனர் இதன் இடையில் மூன்று சங்க நிர்வாகிகளுடனும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் , பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லாததால் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர் 04.10.2023 அன்று அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைய நிதித்துறை செயலாளர் , பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோரை கொண்ட மூவர் குழுவை அமைத்து மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார் , பகுதி நேர சிறப்பாசிரியகளுக்கு மாதம். ரூ.10.000/- தொகுப்பூதியத்தில் இருந்து ரூ. 2.500 உயர்தி மாதம் ரூ.12.500/- வழங்கவும் மருத்துவ காப்பீடு ரூ 10 லட்சம் எனவும் எதேபோன்று தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வயவரம்பை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார் மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் பணியற்றிவரும் (மேல்நிலைப்பள்ளிகளில. ) 177 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் .446 ஊர்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் விரைவில் அதற்கான அரசாணை வெளிவரும் என அறிவித்தார் இதனிடையே அன்பழகனார் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்கள் , பணிநிரந்தரம் வேண்டி போராடிவரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணத்திற்கு போட்டித்தேர்வு கூடாது என போராடும் ஆசிரியர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் திருப்தி அடையாததால் போராட்டம் தொடரும் என அறிவித்தனர் இந்நிலையில் 5ம் தேதி காலையில் அனைத்து ஆசிரியர்களையும் கைது செய்தனர் பின்பு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அசிரியர்கள் அமைச்சர் அவர்களின் வாக்குறுதி ஏற்று வாபஸ் பெற்றனர்

உடலை வருத்தி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் உடல்நிலை மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது இதை பார்க்கும்போது ஒரு அண்ணனாக ஒரு தம்பியாக கண்கலங்குகிறது, தயவு செய்து உங்கள் உடல்நலத்தை பாருங்கள் தங்கள் எதிர்கால சந்ததிகளை பாருங்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மூவர் குழுவை அமைத்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்கவும் அதன் பேரில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார் அதனையேற்றும் பல ஆண்டுகளாக 177 தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஊர்புற நூலகர்கள் 446 பேரை பணி நிரந்தரம் செய்வதை போன்று உங்கள் கோரிக்கையையும் நிறைவேறும் , பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கையும் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது .உடல் நலத்தை வருத்தி போராடவேண்டாம் தயவு கூர்ந்து போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஒரு அண்ணனாக தம்பியாக கேட்டுக்கொள்கிறேன்.

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழிய்யர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.