பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 18, 2023

பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Students can apply for Prime Minister's Scholarship Scheme

பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு, https://scholarships.gov.in என்ற தேசிய உதவித்தொகை தளத்திலும், மத்திய அரசின் சமூகநீதி, அதிகார மளித்தல் துறையின் http://socialjustice.gov.in என்ற இணைய தளத்திலும் பார்த்து, கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த தொகையை பெற 60 சதவீத மதிப்பெண்போதும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 2023- 24-ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபினா், பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது

அதன்படி தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவா்களுக்கு இந்த கல்வித் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், திட்டத்தின் கீழ் பயன்பெறுவோா் தேசியத் தேர்வு முகாமையால் நடத்தப்படும் நுழைவு தோவில் பெறும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவாா்கள். நிகழாண்டில் இந்த எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போதிய காலஅவகாசம் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனால், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோவில் 60 சதவீதம் அதற்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட மத்திய அரசின் https://scholarships.gov.in சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் தொடர்பு கொண்டு கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.