அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் SMC கூட்டம் இன்று அக்டோபர் 13-ஆம் தேதி நடத்துவது சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் SMC கூட்டம் இன்று அக்டோபர் 13-ஆம் தேதி நடத்துவது சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் SMC கூட்டம் நடத்துவது சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் Procedures by State Program Director on behalf of conducting SMC meeting in all Government Primary Schools

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி, சென்னை-600 006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்:1680/Atபமேகு ஒபக/2023, நாள்.04/10/2023,

பொருள்: ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் 2023, அக்டோபர் 13-ஆம் தேதி இரண்டாவது வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு. பார்வை: 1) பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 2223/C7/பமேகு ஒபக / 2022,நாள் 21.07.2022

2) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்:-

1680/A11/பமேகு/ஒபக/2023, நாள்.19/09/2023.

பார்வை-2-இன்படி, பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் எதிர்வரும் 06.10.2023, முதல் வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்பட்டு அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வருகிற அக்டோபர் 3, 4 மற்றும் 5. 6 ஆகிய தேதிகளில் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினைத் தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி (இரண்டாவது வெள்ளிக் கிழமை) அன்று நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. கூட்டத்தினை, பார்வை-2-இல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டத் திட்ட அலுவலர்கள், உதவி மாவட்டத் திட்ட அலுவலர்கள் /பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


குறிப்பு:

அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பார்வை-2- இல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி 06:10.2023 (முதல் வெள்ளிக்கிழமை) அன்று திட்டமிட்டபடி நடைபெறும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.