Documents Required to Apply Education Bank Loan - உயர்கல்வி வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

Documents Required to Apply Education Bank Loan - உயர்கல்வி வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

Documents Required to Apply for Higher Education Bank Loan - உயர்கல்வி வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.

இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தால் படிவத்தின் நகல்.

உயர்கல்விக்கான பல்கலைக்கழகம், கல்லூரி அளித்துள்ள சேர்க்கைக் கடிதம்.

அடையாளச் சான்று பெற்றோர் மற்றும் மாணவரின் பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை.

இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலைக் கொடுக்கவும்

இருப்பிடச் சான்று

கல்வி சார்ந்த ஆவணங்களின் நகல்கள்

பெற்றோரின் வங்கிக் கணக்கு தொடர்பான 3 மாத அறிக்கை.

கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்துவதற்கான நிதி வசதியை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டில் பயில்வதாக இருந்தால் GRE, GMAT, TOEFL, IELTS ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் நகல்.

பெற்றோரின் சம்பளக் கணக்கு, தொழில்முறை கணக்கு, வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தால், 3 ஆண்டு கால விவரம் உள்ளிட்ட சாண்ரையும் அளிக்கவும்

குறிப்பு

மாணவர்கள் கடன் பெற விரும்பும் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை.

விரிவான விவரங்களுக்கு www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.