TET தேர்வில் தேர்ச்சி பெறாததால் தேர்வுநிலை வழங்க இயலாது - DEO செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 12, 2023

TET தேர்வில் தேர்ச்சி பெறாததால் தேர்வுநிலை வழங்க இயலாது - DEO செயல்முறைகள்



Failing to pass TET examination cannot be awarded - District Education Officer - Intermediate Processes - TET தேர்வில் தேர்ச்சி பெறாததால் தேர்வுநிலை வழங்க இயலாது - மாவட்டக் கல்வி அலுவலரின் - இடைநிலை செயல்முறைகள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தேர்வுநிலை வழங்க மறுப்பு

29.07.2011 - க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என W.A.No.313 , 333 , 1891 2050 , 2082 2617 , 2795 OF 2022 வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அன்னார் நாளதுவரை ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெறாத நிலையில் அன்னாரது கருத்துரு பரிசீலிக்க இயலாது.

மேற்காண் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சரிபார்ப்பு பட்டியலில் கோரப்பட்ட விவரங்களின்படி முழுமையான வடிவில் தயார் செய்து தலைமையாசிரியர் உரியமுறையில் பரிசீலித்து உரிய ஆவணங்கள் இணைத்து தேர்வுநிலை பெற தகுதியிருப்பின் மட்டும் கருத்துருவினை மீள அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

பெறப்பட்ட கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு அசலாக இத்துடன் இணைத்து திருப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DEO செயல்முறைகள்

1 comment:

  1. ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா... இந்தப் பிரச்சினை நீண்டு கொண்டே செல்கிறது....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.