ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் கவனத்திற்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 30, 2023

ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் கவனத்திற்கு!



ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் குடும்ப அட்டை எண், ஆதார அட்டையை சங்கச் செயலாளர் இடம் உடனடியாக கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்



கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகளின் உறுப்பினர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க திருச்சிராப்பள்ளி சரக துணைப்பதிவாளர் வேண்டுகோள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் உடன் சமர்பித்து விட வேண்டும். எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் "அ" வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

மேற்படி "அ” வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும் தேர்தலில் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அத்தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும்.

எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க திருச்சிராப்பள்ளி சரக துணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் திருச்சிராப்பள்ளி சரகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

நாள் : 30.09.2023, திருச்சி. தி.மா.கூ.ஒ.வெ.எண்.055/2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.