அமைச்சர் அன்பில் மகேஷூக்கு திடீர் உடல்நலக்குறைவு (நெஞ்சு வலி!) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 12, 2023

அமைச்சர் அன்பில் மகேஷூக்கு திடீர் உடல்நலக்குறைவு (நெஞ்சு வலி!)

அமைச்சர் அன்பில் மகேஷூக்கு நெஞ்சு வலி!

www.kalviseithiofficial.com


காரிமங்கலம் அருண் மருத்துவமனையில் *அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர்* அனுமதி. திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் வழியில் வரும் பொழுது அருண் டாக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .www.kalviseithiofficial.com கிருஷ்ணகிரியில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் காரிமங்கலம் விரைந்துள்ளனர்

அமைச்சர் அன்பில் மகேஷூக்கு நெஞ்சு வலி!

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது, அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகில் உள்ள தருமபுரி காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து. முதலுதவிக்கு பின் அவர் பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அரசு விழாவுக்காக கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு

தருமபுரி அருகே காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்

கிருஷ்ணகிரிக்கு வரும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு . காரிமங்கலம் மருத்துவமனையில் அனுமதி மேல் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயண இருதயலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்

இப்போது நலமாக உள்ளார் என்று தகவல்... தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தர்மபுரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பிளஸ்2 மாணவர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை சக மாணவர்கள் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நாளைய தமிழ் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள் என்று கூறியிருந்தார்

இந்தநிலையில், தர்மபுரி சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.