2 CEO -க்கள் பொறுப்பேற்பு - முடிவுக்கு வந்தது பனிப்போர்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

2 CEO -க்கள் பொறுப்பேற்பு - முடிவுக்கு வந்தது பனிப்போர்!



2 CEO -க்கள் பொறுப்பேற்பு - முடிவுக்கு வந்தது பனிப்போர்

இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட பணியிடத்தில் நேற்று பணியில் சேர்ந்தனர்.

இதனால், பள்ளிக் கல்வித்துறை செயலர், மாவட்ட கலெக்டர் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்தது.

கடந்த 11ம் தேதி, சி.இ.ஓ.,க்களை இடமாற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா உத்தரவிட்டார். அவர்கள் புதிய பணியிடத்தில் சேராததால், குழப்பம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, இடமாறுதல் உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டு, கரூர் சி.இ.ஓ., கீதா திருப்பூருக்கும்; கோவை சி.இ.ஓ., சுமதி கரூருக்கும் இடமாற்றம் செய்து, கடந்த 21ம் தேதி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கரூர் சி.இ.ஓ., கீதா இடமாறுதலில் திருப்பூர் செல்ல, அம்மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை. இதனால், புதிய இடமான கரூரில் சுமதியால் பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இப்பிரச்னை பெரிதானது. இது தொடர்பாக, நேற்று விரிவாக செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து, இருவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் உடனடியாக சேர, பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டார்.

அதை ஏற்று திருப்பூர் சி.இ.ஓ.,வாக கீதா; கரூர் சி.இ.ஓ.,வாக சுமதி இருவரும் நேற்று பொறுப்பேற்றனர்.

இதையடுத்து, செயலர், கலெக்டர் பனிப்போர் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.