1,670 மருத்துவ இடங்கள் காலி 2ம் கட்ட கவுன்சிலிங்கில் வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 21, 2023

1,670 மருத்துவ இடங்கள் காலி 2ம் கட்ட கவுன்சிலிங்கில் வாய்ப்பு

1,670 மருத்துவ இடங்கள் காலி 2ம் கட்ட கவுன்சிலிங்கில் வாய்ப்பு

மருத்துவ படிப்பில், 1,670 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அது கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், அனைத்து இடங்களும் நிரம்பின. இடங்களை பெற்றவர்கள் கல்லுாரிகளில் சேர, 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில், கல்லுாரிகளில் சேராதவர்களின் இடங்கள், காலியான இடங்களாக அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில், அரசு ஒதுக்கீட்டில், 119 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ்., - 818 பி.டி.எஸ்., என, 1,670 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோர், இன்றைக்குள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இடங்கள் பெற்றவர்கள் விபரம், 31ம் தேதி அன்று வெளியிடப்பட்டு, செப்., 1ம் தேதி முதல் 4ம் தேதிக்குள், கல்லுாரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என, மருத்துவ கல்வி தேர்வு குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.