கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 8, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Tamil Nadu Government has released the application form for getting Artist Women Entitlement - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

உறுதிமொழி

1 மகளிர் உரிமைத்தொகை பெற எனது ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன்.

2. எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் இல்லை.

3. எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சதிற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் அல்ல.

4. எனது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.25 இலட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் யாரும் இல்லை.

5. எனது குடும்பத்தில் மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள். வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் இல்லை. 6. எனது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) யாரும் இல்லை.

7. எனது குடும்பத்தில் யாரும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கவில்லை.

8. எனது குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து (Amual turnover) சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இல்லை.

9. எனது குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (CAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.

10. எனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இல்லை.

11. விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை தவறான தகவல்களைக் கொடுத்து மகளிர் உரிமைத்தொகை பெற்றது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன், CLICK HERE TO DOWNLOAD உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.