வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2023 - இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2023 - வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 12, 2023

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2023 - இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2023 - வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை -



வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2023

*இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2023*

*வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை*

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விபா, என்.சி.இ.ஆர்.டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம், அல்லது வீட்டில் இருந்தவாறே இத்தேர்வை இணைய வழியில் மாணவர்கள் எழுதலாம். இந்தியா முழுவதும் இத்தேர்வை மாணவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. 29-10-2023 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 30-10-2023 (திங்கட்கிழமை) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் . தேர்வு நடைபெற உள்ளது. இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ், மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.

*தேர்வுக் கட்டணம்: 200 ரூபாய்

*விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-9-2023

*யாரெல்லாம் தேர்வு எழுதலாம்?*

6ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.

6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.

CLICK HERE TO DOWNLOAD Notification PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.