தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு - JACTO-TNSE - 09.07.2023 (ஞாயிறு) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 9, 2023

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு - JACTO-TNSE - 09.07.2023 (ஞாயிறு)

📌📌📌📌📌📌📌📌📌

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு-JACTO-TNSE

📌📌📌📌📌📌📌📌📌

இன்று 09.07.2023(ஞாயிறு) திருச்சி மாநகரில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 15 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு JACTO-TNSE இன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு சங்கரபெருமாள் மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் திரு உதயசூரியன் கூட்டுத்தலைமை வகித்தனர்.தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் தலைவர் திரு அ மாயவன் Ex MLC அவர்கள் முன்னிலை வகித்தார் இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான CPS ஐ இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துதல்,சரண்டர் விடுப்பு,ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவையில்லை என தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச மிக முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 28 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெற இருக்கும் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் வண்ணம் JACTO-TNSE இன் உறுப்பு சங்கங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களின் கூட்டத்தை கூட்டி துண்டு பிரசுரங்கள் மூலம் ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!!

வெற்றி பெறுவோம்!!!

📌📌📌📌📌📌📌📌📌

இவண்

பா ஆரோக்கியதாஸ்

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை(TATPF)&

மாநில ஒருங்கிணைப்பாளர்,

JACTO-TANSE

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.