TNPSC இன்று ( 07/07/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 7, 2023

TNPSC இன்று ( 07/07/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீட்டு எண்: 50/2023

செய்திக்குறிப்பு

நாள் : 07.07.2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:16/2022. நாள் 21.07.2022 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - 1 (தொகுதி- (1) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள். சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 21.07.2023 மாலை 05.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அஜய் யாதவ், இ.ஆ.ப,, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.