பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விரைவில் முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 4, 2023

பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விரைவில் முடிவு



பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்படுமா? Will the opening date of schools be pushed back again?

தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்ததி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். 1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

எனவே பள்ளிகள் திறப் பது மீண்டும் தள்ளி போகுமா? இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.