இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சம வேலைக்கு சம ஊதியம் கூறுதல் - சார்பு - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 14.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 14, 2023

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சம வேலைக்கு சம ஊதியம் கூறுதல் - சார்பு - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 14.06.2023

Secondary Teacher Salary Discrepancy Saying Equal Pay for Equal Work - Bias - Tamil Nadu Primary School Teachers Alliance Report - 14.06.2023 - இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சம வேலைக்கு சம ஊதியம் கூறுதல் - சார்பு:-

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 14.06.2023

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஆய்வுக் குழுவிடம் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் அவர்கள் வலியுறுத்தல் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கும் விதமாக நிதித்துறை செயலாளர்(செலவினம்) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று (14.6.23) தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் (செலவினம்) அருண்ராஜ் ஐஏஎஸ் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருமதி காகர்லா உஷா, தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்கள் 9 பக்க அறிக்கையினை வழங்கி சுமார் 20 நிமிடங்கள் விளக்கிப் பேசினார். பொதுச்செயலாளர் அவர்களின் தெளிவான உரையைக் கேட்ட அதிகாரிகள் முழு திருப்தியடைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். மேலும் சம ஊதியம் வழங்கப்படும் போது என்றிலிருந்து வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் கேட்டனர். பாதிப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து நிலுவையுடன் வழங்கப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மேலும் மத்திய அரசுக்கான ஊதியத்தை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். நிகழ்வில் மாநிலத்தலைவர் மு.லெட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் இரா.குமார், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ரெ.ஈவேரா, சென்னை மாநகராட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை 14.06.2023 PDF (Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.