அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Kalviseithi Official

Latest

Thursday, June 1, 2023

அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புTET - 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமல்ல - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு Eligibility Test Not Compulsory for Teachers Appointed Before TET - 2011 - Madras High Court Verdict

2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், டிஇடி தேர்வில் தகுதி பெறவில்லை எனக்கூறி, அவர்களின் வருடாந்திர சம்பள உயர்வை நிறுத்தி வைத்து பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தும் தகுதி பெறாத ஆசிரியர்கள் சம்பள உயர்வு பெற தேவையில்லை.

அவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2011ம் ஆண்டிற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்.

சம்பள உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை.

பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்.

நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதி ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .

1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை .increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்சி பெற வேண்டும் .

2. 27.09 .2011 கட் ஆப் என்பது பதவி உயர்வுக்கு பொருந்தாது .27.09.2011க்கு முன்பாக நியமனம் ஆகி இருந்தாலும்பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் .

*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

* தற்போது பணியில் உள்ள  every teacher ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு , பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியமாகும்

பதவி உயர்விற்கு TET தேவை என 02.06.2023 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின் நகல்

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.