CUET நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 4, 2023

CUET நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு



CUET நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு CUET Entrance Test: Hallticket Release



மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2023-24-ம் கல்விஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

முதல்கட்டமாக, நாளை முதல் வரும் 8-ம் தேதி வரை தேர்வெழுத உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சந்தேகங்களுக்கு 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.