இடைநிற்கும் பள்ளி மாணவர்கள் பற்றி அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 31, 2023

இடைநிற்கும் பள்ளி மாணவர்கள் பற்றி அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

இடைநிற்கும் பள்ளி மாணவர்கள் பற்றி அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் Shocking statistics about school dropouts

உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில், பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இடைநிற்கும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் 85 சதவிகிதம், வெறும் 11 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.

உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 30 லட்சம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது கல்வியை பூர்த்திசெய்யவில்லை. இதற்கு இணையாக, ராஜஸ்தான், கர்நாடகம், அசாம், மேற்கு வங்கம், ஹரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பள்ளியில் இடைநிற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதேவே, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் இடைநிற்கும் விகிதம் 77 சதவிகிதமாக உள்ளது. அதாவது, உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 18 லட்சம் மாணவர்கள் இடைநின்றுள்ளனர்.

பத்து மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக, பல மாநிலங்களில், மாணவர்களின் இடைநிற்கும் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் மத்திய கல்வித் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் பொதுத் தேர்வுகளின் அழுத்தம், மதிப்பெண் அதிகம் பெற வேண்டும் என்ற பயம், வெற்றி தோல்வியால் ஏற்படும் அச்சம், பல்வேறு நுழைவுத் தேர்வுகள் என மாணவர்களின் இடைநிற்றலை அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

படிப்பில் பெண்கள் ஆண்களைவிடவும் சிறந்து விளங்கினாலும், ஆண்களுக்கு கல்வியளிக்கவும், கல்விக்காக செலவிடவுமே பல மாநிலங்களில் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

மேலும், 10வது படித்த 35 லட்சம் மாணவர்கள் 11ஆம் வகுப்புக்குச் செல்லவில்லை. இவர்களில் 27.5 லட்சம் பேர் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டனர். 7.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.