பிளஸ் 1ல் முக்கிய பாடப்பிரிவுகளுக்கு மூடுவிழா - அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் குழப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 24, 2023

பிளஸ் 1ல் முக்கிய பாடப்பிரிவுகளுக்கு மூடுவிழா - அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் குழப்பம்

script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7383462039845652" crossorigin="anonymous">


பிளஸ் 1ல் முக்கிய பாடப்பிரிவுகளுக்கு மூடுவிழா

அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் பாடப்பிரிவுகளை மூடி விட்டு, மற்ற பிரிவுகளில் மாணவர்களை சேர்ப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. கட்டாய இடமாற்றம் இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

இந்நிலையில், பல அரசு பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், வேளாண் அறிவியல், துணி நுால் தொழில்நுட்பம், அடிப்படை மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளில் சேர வரும் மாணவர்கள் வேறு பாடப்பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர்.

மூடப்படும் பாடப்பிரிவின் ஆசிரியர்களும் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் அக்ரி மாதவன் கூறியதாவது:

அரசு பள்ளிகளில், வேளாண் அறிவியல் பாடப்பிரிவு, 2001ல் துவங்கப்பட்டு, இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து, உயர்கல்வி சென்றுள்ளனர். இந்த பாடப்பிரிவில் தேர்ச்சி பெறுவோருக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை, கால்நடை மருத்துவ பல்கலை, அண்ணாமலை பல்கலை, மீன்வள பல்கலை ஆகியவற்றில், மாணவர் சேர்க்கையில், 5 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தனியார் வேளாண் கல்லுாரிகளிலும், வேளாண் தொழிற்கல்வி மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல அரசு பள்ளிகளில், மற்ற தொழிற்கல்வியுடன் வேளாண் தொழிற்கல்வி பிரிவுகளும் மூடப்படுகின்றன.

பிளஸ் 1 இந்த பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த ஆண்டில் மட்டும், திண்டுக்கல் மார்க்கம்பட்டி, கடலுார் ம.புடையூர், திருக்கழுங்குன்றம், செஞ்சி, சத்தியமங்கலம், தஞ்சாவூர் கண்ணுக்குடி மேற்கு, பல்லடம், மொடக்குறிச்சி, கரூர் உப்பிடமங்கலம், சிவகங்கை எரியூர், திருநெல்வேலி திருக்குறுங்குடி, அரியலுார் ஏலாக்குறிச்சி ஆகிய, 12 இடங்களில், வேளாண் அறிவியல் படிப்பு மூடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை, வேளாண் கல்வியை படிக்க நினைக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்க செய்வதாகும். 'ஸ்கில் இந்தியா' திட்டம்

எனவே, வேளாண் அறிவியல் பாடம் நடத்தப்படும், 293 பள்ளிகளிலும், பிளஸ் 1ல் முறையான மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். எங்கேயும் பாடப்பிரிவுகளை மூடக்கூடாது.

தொழிற்கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, வேலைவாய்ப்பு திறன் பாடத்திட்டத்தை, மத்திய அரசின் , 'ஸ்கில் இந்தியா' திட்டத்துக்கு உதவும் வகையில் வடிவமைக்க வேண்டும். அப்போதுதான், தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயன் தருவதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.