முதுநிலை ஆசிரியர்களுக்கு 10ம் வகுப்பு பணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 20, 2023

முதுநிலை ஆசிரியர்களுக்கு 10ம் வகுப்பு பணி



முதுநிலை ஆசிரியர்களுக்கு 10ம் வகுப்பு பணி

இந்த ஆண்டு முதல், புதிய நடைமுறையாக, அரசு மேல்நிலை பள்ளிகளில், உபரியாக உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு, 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.அவர்களுக்கு பதில், அதே பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள், உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த முடிவுக்கு, ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:பிளஸ் 2 பாடம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களை, 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க அனுப்புவது, கற்பித்தல் பணியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, பிளஸ் 2 பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில், முதுநிலை ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு அதிக வகுப்புகள் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.மேலும், அந்த மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்குதல், பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுதல், விடைத்தாள் திருத்த பணிகள் என, முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி அதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் முதுநிலை ஆசிரியர்களால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியாது.

அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், பாடம் நடத்த ஆசிரியரே இல்லாத நிலை ஏற்படும். எனவே, இந்த முடிவை மாற்ற வேண்டும்.பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே, 9, 10ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.