10,11,12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை, முன்கூட்டியே வெளியிட, அரசு தேர்வுத் துறை திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 18, 2023

10,11,12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை, முன்கூட்டியே வெளியிட, அரசு தேர்வுத் துறை திட்டம்

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை, முன்கூட்டியே வெளியிட, அரசு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 13ல் துவங்கி, ஏப்., 3ல் முடிந்தது. பிளஸ் 1 பொது தேர்வு ஏப்., 5ல் முடிந்தது. 10ம் வகுப்பு பொது தேர்வுகள், வரும், 20ம் தேதியுடன் முடிகின்றன.

இதற்கிடையே, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 விடைத்தாள் திருத்த பணிகள், 11ம் தேதி முதல் நடந்து வருகின்றன. 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, மே 3க்குள் நிறைவடைய உள்ளது.

இதை தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே 5; பிளஸ் 1 மே 10 மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகள், மே 19ல் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடப்பதால், முன்கூட்டியே முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பிளஸ் 2 தேர்வு மே 5ம் தேதி; பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு என, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, மே 10ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இதன் காரணமாக, மே 10ம் தேதிக்குள் அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.