ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு - MLA கைது - CBI நடவடிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 17, 2023

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு - MLA கைது - CBI நடவடிக்கை!



ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு - MLA கைது - CBI நடவடிக்கை! - Teacher recruitment scam case - MLA arrested - CBI action!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஜிபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வரும் நிலையில் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வான ஜிபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3-வது எம்.எல்.ஏ. இவர் புர்வான் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் வேலை உத்தரவாதம் வழங்கி, பலரிடம் பணம் சேகரித்து உள்ளார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. சமீபத்தில் இவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சி.பி.ஐ. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் விசாரணைக்கு உரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டியவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் பெயருக்கு பக்கத்தில் குறிப்பிடப்பட்ட பணம் ஆகியவை கொண்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ. கிருஷ்ண சஹாவை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவையும் சிபிஐ அமைத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.