கூகுள் பே மூலம் லஞ்சம் கேட்கும் வித்தியசமான கல்வி அதிகாரி - ஆசிரியர்கள் ஷாக்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 1, 2023

கூகுள் பே மூலம் லஞ்சம் கேட்கும் வித்தியசமான கல்வி அதிகாரி - ஆசிரியர்கள் ஷாக்!

Weird Education Officer Asking Bribes Through Google Pay - Teachers Shock!
கூகுள் பே மூலம் லஞ்சம் கேட்கும் வித்தியசமான கல்வி அதிகாரி - ஆசிரியர்கள் ஷாக் - சிஇஒ என்ன செய்ய போகிறார்... வட்டார கல்வி அலுவலர் மீது புகார் - Nambiyur Block Educational Officer

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாரத்தில் நூற்றக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நம்பியூர் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றுபவர் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் பண பலன்களை முடித்து தர லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக வட்டார கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை கண்காணித்தல், ஆய்வு நடத்தி ஆசிரியர் வருகை பதிவேட்டு ஆய்வு செய்தல், பள்ளி கட்டிட உறுதி தன்மை சரிபார்த்தல் உள்ளிட்டவை ஆகும்.
வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணப்பயன் மற்றும் கல்வித்துறை மூலம் வரக்கூடிய அனைத்து விதமான சலுகைகள் பெறுவதற்கு வட்டார கல்வி அலுவலரை அணுகும்போது லஞ்சம் கொடுத்தால் மட்டுமே ஒப்புதல் வழங்குவதாக புகார் கூறப்படுகிறது. அதுவும் கூகுள்பே மூலமாகவே மட்டுமே லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆய்வுக்கு செல்லும்போது, சகலவிதமான வசதிகள் எதிர்பார்ப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோரமடை ஊராட்சி பள்ளி சில முதன்மை ஆசிரியர்கள் இவருக்கு வசூல் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்களாம். இவர் சத்தியமங்கலத்தில் பணியாற்றியபோது, இவர் மீது குற்றச்சாட்டு இருந்ததாம். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரியை வலியுறுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.