உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 11-இல் பணி நிரவல் கலந்தாய்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 8, 2023

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 11-இல் பணி நிரவல் கலந்தாய்வு

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 11-இல் பணி நிரவல் கலந்தாய்வு

சென்னை, ஏப். 8: அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு ஏப்.11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கு 1.8.2022 நிலவ ரப்படி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் (நிலை- 1 ) பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து கடிதம் மூலமாக அறிக்கை பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அரசாணையின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 400 மாண வர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை- 1 பதவியில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர 183 பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை- 1 பதவி யில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் 400-க்கும் குறைவான மாண வர்கள் உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரி யாக உள்ளனர்.

எனவே, விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் கள், தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்படுவர். இதற்கான கலந்தாய்வு ஏப்.11-ஆம் தேதி இணையவழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக் குத்தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவேண் டும். எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவு றுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.