தொலைநிலை கல்வி அங்கீகாரம்: யு.ஜி.சி., அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

தொலைநிலை கல்வி அங்கீகாரம்: யு.ஜி.சி., அழைப்பு

தொலைநிலை கல்வி அங்கீகாரம்: யு.ஜி.சி., அழைப்பு

'பல்கலைகள், தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற, வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ள அறிவிப்பு:

அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்றும் தொலைநிலை கல்வியிலும், 'ஆன்லைன்' வழியிலும், பட்டப் படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.,யில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும்.

வரும் 2023- - 24ம் கல்வியாண்டில், தொலைநிலை படிப்பை நடத்த, 15ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இந்த மாதம், 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், https://deb.ugc.ac.in/ என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்த பின், அதன் நகல்களை ஏப்., 15க்குள், யு.ஜி.சி.,க்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் மட்டும் அளித்து விட்டால், அங்கீகாரம் பெற்றதாக கருதப்படாது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.