அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 15, 2023

அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!!

தொழில்நுட்ப ஆய்வகங்களை (Hitech Labs) இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்பாடு

2023-24ஆம் கல்வியாண்டு முதல் ஏற்கனவே இயங்கி வரும் 6029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை (Hitech Labs) இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு

அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!!

இடம்: அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்

நாள் : 15.03.2023

நேரம்: மாலை 4 மணி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது ''மொழிகள்' திட்டம்.

இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது. எழுத்துக்களில், வாக்கிய அமைப்பில், உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலத்தையும் தமிழையும் கற்று தங்கள் சொல்வளத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய தொடர்புகளுக்காக மாணவர்கள் தயாராவார்கள். இதற்கென 'மொழிகள்' என்கிற பெயரில் மொழி ஆய்வகங்களை பள்ளிகள் தோறும் தொடங்கும் திட்டத்தின் துவக்க விழா மார்ச் 15, 2023 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மொழிகள் ஆய்வகத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை ஆற்றுகிறார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது ''மொழிகள்' திட்டம்.

இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது. எழுத்துக்களில், வாக்கிய அமைப்பில், உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலத்தையும் தமிழையும் கற்று தங்கள் சொல்வளத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய தொடர்புகளுக்காக மாணவர்கள் தயாராவார்கள். இதற்கென 'மொழிகள்' என்கிற பெயரில் மொழி ஆய்வகங்களை பள்ளிகள் தோறும் தொடங்கும் திட்டத்தின் துவக்க விழா மார்ச் 15, 2023 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மொழிகள் ஆய்வகத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை ஆற்றுகிறார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

விழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று தலைமையுரை ஆற்றுகிறார். மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.பி. மகாபாரதி, இ.ஆ.ப, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.