வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் agri stack amd grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 14, 2023

வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் agri stack amd grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவு

வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் agri stack amd grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவு

வேளாண் அடுக்கு ( Agri Stack) மற்றும் GRAINS(Grower Online Registration of Agricultural Input System) - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை - தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டத்திலும் மேற்படி வேளாண் அடுக்கு திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்களின் விவரங்களை GRAINS App செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதால் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரத்தினை Agri Stack மற்றும் GRAINS App என்ற வலையதளத்தில் உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் தொடர்பாக, //பார்வை சம்மந்தப்பட்டவை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டங்களில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளபடி வேளாண் அடுக்கு ( Agri Stack) மற்றும் GRAINS (Grower Online Registration of Agricultural Input System) என்ற திட்டத்தின் மூலம் வேளாண்மை உழவர்களின் நலத்திற்காக நில உரிமையாளர்களின் விவரங்கள் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் ஆகியவற்றுடன் விவசாயிகளின் ஆதார் எண்புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள். நிலப்பட்டா ஆகிய விவரங்கள் குறித்து பிரதி வாரங்களில் புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் முகாம் அமைத்து மேற்படி விவரங்களை நில உரிமையாளர்களிடமிருந்து பெற்று Agri Stack and GRAINS Appயில் சம்மந்தபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளீடு செய்யுமாறும், மேற்படி முகாமில் சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலர்களும் கலந்து கொண்டு மேற்படி பணியினை முடிக்குமாறும், மற்றும் சம்மந்தப்பட்ட கிராமங்களை குறுவட்ட வாரியாக தேர்வு செய்து கிராமங்களை பட்டியலிட்டு செயல்முறை ஆணைகள் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.