சிறார் இலக்கியத் திருவிழா - மாநில அளவிலான மாணவர் பயிலரங்கம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 27, 2023

சிறார் இலக்கியத் திருவிழா - மாநில அளவிலான மாணவர் பயிலரங்கம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு

சிறார் இலக்கியத் திருவிழா - மாநில அளவிலான மாணவர் பயிலரங்கம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு Juvenile Literature Festival - State Level Student Workshop - School Education Commissioner Press Call செய்தியாளர் அழைப்பு

சிறார் இலக்கியத் திருவிழா

மாநில அளவிலான மாணவர் பயிலரங்கம்.

இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், நாள் : மார் 27 மாலை 6 மணி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முயற்சியே இலக்கிய மன்றங்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உட்பட பல்வேறு வகைப் போட்டிகளை நடத்தி இருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.

இப்போட்டிகளில் பள்ளி அளவில் வென்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான பயிலரங்கத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்ள்.

மாணவர்கள் தங்கள் படைப்பூக்கத் திறனை வெளிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைத்துக் கொடுக்கும் மாபெரும் தளம் இது, தமிழ் மொழியின் அடையாளமாக விளங்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கதைசொல்லிகள், ஊடகவியலாளர்கள் மாணவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் உரையாடி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர். மொழிவளம், உரைநடை, கட்டுரை, கதை, பேச்சு போன்ற பிரிவுகளில் முழுமையான பயிற்சியும் அளிக்க இருக்கின்றனர். மார்ச் 27 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறும் பயிலரங்கில் தொடக்க விழா 27-03- 23 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.. பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிகழ்விற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆணையர்

பள்ளிக் கல்வி

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.