பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 6, 2023

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

ஒவ்வொரு மாதமும் அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் பிப்ரவரி 13 முதல் 17 வரை மல்லி தமிழ் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். இந்த படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கட்டுரை , தேன்சிட்டு இதழிலும் வெளிவந்துள்ளது . ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியருடன் இணைந்து பொறுப்பு ஆசிரியரும் பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.

திரையிடலுக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டியவை :

மல்லி (திரைப்படம்) கதைச்சுருக்கம்

மல்லி என்பது 1998 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரொறன்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஏழைப் பெண்ணான மல்லி பி. ஸ்வேதா தனது பெற்றோர்களுக்காக விறகுகளைச் சேகரித்து வருவாள். மேலும் தனது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத அவளின் நண்பியுடன் விளையாடி வருவாள். அவள் வெகு நாட்களாக தனக்கு புதியதொரு ஆடை ஒன்றை உடுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் ஒரு கதை கூறுபவனைச் சந்திக்கும் பொழுது அவனும் ஒரு நீல நிற மாயக்கல் ஒன்று உள்ளது அதனை நீ பெற்றால் உன் தோழியின் ஊணம் மாறிவிடும் என்று கூறுகின்றான். அவளும் அந்நீல நிற மாயக் கல்லை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றாள் இதுவே கதையின் கருவாகும்.

CoSE - Movies Screening - Download Here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.