போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை - ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு - நாள்:09.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 9, 2023

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை - ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு - நாள்:09.02.2023



Scholarship - Adi Dravidar (M) Tribal Welfare Department - Press Release - Date:09.02.2023 - கல்வி உதவித்தொகை - ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு - நாள்:09.02.2023 செய்தி வெளியீடு எண் : 268

நாள்:09.02.2023

செய்தி வெளியீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து (கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும்) புதிய (fresh) மற்றும் புதுப்பித்தல் (renewal) இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

https://tnadtwscholarship.tn.gov.in

மேலும், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்த விவரங்கள் அறிய விண்ணப்பம் பதிவிடும் நடைமுறை குறித்த குறும் படம் மற்றும் மாவட்ட அளவில் உதவி பெற அணுக வேண்டிய அலுவலர்கள் குறித்த விவரம் இக்கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே மாணவர் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.