ஜாக்டோ-ஜியோ - மதுரை மாவட்டம் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் : 5.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 4, 2023

ஜாக்டோ-ஜியோ - மதுரை மாவட்டம் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் : 5.01.2023

ஜாக்டோ ஜியோ MADURAI

CPS திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல்.

காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில்....

மதுரை மாவட்டம்

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில்... மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

05.01.2023 வியாழக்கிழமை

மாலை 5.00

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தலைமை: மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

போராட்டவுரை :

அனைத்து சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள்

கோரிக்கைகள்

1. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் (CPS) திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

2.இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

3. முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (DA) சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

4.தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

5.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

6. 7 வது ஊதியக்குழு 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

7. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.