அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களில் முதுகலை ஆசிரியர்களுக்கு 50% உள் இட ஒதுக்கீடு?? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 27, 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களில் முதுகலை ஆசிரியர்களுக்கு 50% உள் இட ஒதுக்கீடு??

*DRPGTA 27.01.23*

*அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களில் முதுகலை* *ஆசிரியர்களுக்கு*
 *50% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்*.

முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 
பதிவு எண் 239/2017

அனுப்புநர்
                  ஆ.இராமு,
மாநிலத் தலைவர், 
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், 
       DRPGTA, 
      7373761517.

பெறுநர் 
            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 
தலைமை செயலகம், 
சென்னை -9.

ஐயா,
        பொருள்:-
      அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களில் முதுகலை ஆசிரியர்களுக்கு
 50% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுதல் சார்பு 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கிறது வருகிறது.
அதன் அடிப்படையில் உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அவர்களைப் பணி அமர்த்தி வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023 ஆம் ஆண்டு திட்டத்தில் நடப்பு ஜனவரி மாத இறுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் , இதற்கான எழுத்து தேர்வு வரும் 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது என்றும் தோராயமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

மேற்கண்ட ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை எதிர்நோக்கி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக தகுதி உள்ள பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர்.

இதில் 
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதுநிலை பட்டப்படிப்புடன் முனைவர் பட்டம் (பிஎச்டி), உதவி பேராசிரியர் ஆவதற்கு மத்திய அரசால் நடத்தப்படும் (நெட்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மாநில அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றவர்கள் முதுகலை ஆசிரியர்களாக ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் கற்றல் கற்பித்தலில் 5,10, 15 ஆண்டுகள் என மிகுந்த அனுபவம் பெற்றவர்களாக விளங்கி வருகிறார்கள்.

மேலும் தற்பொழுது பள்ளிக்கல்வித் துறையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடங்கள் ஒரு காலத்தில் கல்லூரியில் கற்பிக்கப்பட்ட பாடங்களாக இருந்தவை தான்..

அதனை தற்போது மிகவும் திறம்பட நடத்தி தங்களிடம் படிக்கும் மாணவ மாணவிகளை 100% தேர்ச்சி பெற வைத்து அவர்களை அந்த பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண்கள் வாங்க வைத்து அவர்களை அந்த துறையில் மிக உயர்ந்த பட்டப்படிப்புகள் படிக்க செல்வதற்கு முதுகலை ஆசிரியர்கள் பெரும் பணி ஆற்றி வருகின்றனர்.

மேலும் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் தோராயமாக 30 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இதில் 50 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளிக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதினால் அவர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல பள்ளிக்கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு தகுதியுடன் இளநிலை உதவியாளராக பணியமர்த்தபட்டவர்களுக்கு அடுத்து இடைநிலை ஆசிரியரோ பட்டதாரி ஆசிரியரோ பதவி உயர்வு வழங்காமல் 2% நேரடியாக முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கநிலை பணியாக இருக்கும் இளநிலை உதவியாளருக்கு மிக உயர்ந்த நிலை பணியாக இருக்கக்கூடிய முதுகலை ஆசிரியர் பணியிடம் நேரடியாக பதவி உயர்வாக வழங்கப்படுவது போல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஒருபதவி உயர்வு மட்டுமே பெற்று பணி ஓய்வு பெறும் பெரும்பாலான முதுகலை ஆசிரியர்களுக்கு 
 கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான பணி நியமனத்தில் 50% உள் இட ஒதுக்கீடு வழங்கி, பதவி உயர்வு வழங்கி சமூக நீதியை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

தமிழகத்தில் 1978 ல் மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது கல்லூரி பேராசிரியர்களின் ஊதியம் 700 ரூபாயாகவும்,முதுகலை ஆசிரியர்களின் ஊதியம் 675 ரூபாயாகவும் இருந்தது.
 இது 3.7% மட்டுமே அதாவது ரூபாய் 25 மட்டுமே மூன்றாவது ஊதியக் குழுவில் அதிகமாக இருந்தது. 

இப்படி தொடக்க காலத்தில் முதுகலை ஆசிரியர்களின் பணியும் கல்லூரி பேராசிரியர்களின் பணியும் ஏறக்குறைய சரிசமமாகவே கருதப்பட்டது.
அப்போது தூரத்தில் கல்லூரியில் சென்று பேராசிரியராக பணிபுரிவதை விட சொந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியலாம் என எண்ணி பலர் கல்லூரி பேராசிரியர் பணியை மறுத்து முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த காலங்களும் உண்டு.
அப்படிப்பட்ட பணித் தொகுதியாக இருந்து வரும் முதுகலை ஆசிரியர் பணித் தொகுதியில் கல்லூரி உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதிகளுடன் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான முதுகலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ள 4000 கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் 50% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு 
ஆ.இராமு
 மாநிலத்தலைவர் 
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
 7373761517

26.01.23
சென்னை.

நகல்
மாண்புமிகு  
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலாளர் 
உயர்திரு த.உதயசந்திரன் இஆபஅவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை .9.

மாண்புமிகு
 தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம் சென்னை 9

மாண்புமிகு 
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம் ,
சென்னை 9.

மதிப்பிற்குரிய உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
 தலைமைச் செயலகம், சென்னை 9.

மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
 தலைமைச் செயலகம், சென்னை 9.

நேர்மை மிகு
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
 பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை 6.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.