ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பு ஊசி பண்டகக் காப்பாளர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு - 28.12.2022 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 22, 2022

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பு ஊசி பண்டகக் காப்பாளர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு - 28.12.2022 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பு ஊசி பண்டகக் காப்பாளர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு - 28.12.2022 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 20.10.2021 நாளிட்ட அறிவிக்கை எண்: 15/2021- ன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 11012022 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22032022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பூசி பண்டகக் காப்பாளர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 2812.2022 அன்று சென்னை-03, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை இடஒதுக்கீட்டு விதிகள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.