SMC கூட்டம் நாளை பிற்பகல் 04.30 லிருந்து 06.00 வரை நடத்த உத்தரவு - Order to hold SMC meeting tomorrow afternoon from 04.30 to 06.00 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 29, 2022

SMC கூட்டம் நாளை பிற்பகல் 04.30 லிருந்து 06.00 வரை நடத்த உத்தரவு - Order to hold SMC meeting tomorrow afternoon from 04.30 to 06.00

SMC கூட்டம் நாளை பிற்பகல் 04.30 லிருந்து 06.00 வரை நடத்த உத்தரவு - Order to hold SMC meeting tomorrow afternoon from 04.30 to 06.00

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

பொருள்:

ந.க.எண்:2223/C7/பமேகு/ஒபக/2022 நாள்: 09.2022

பார்வை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் கூடுதல் கூடக்குறிப்பு - சார்பு 1. பள்ளிக்கல்வி ஆணையர். தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் இணை செயல்முறைகள்

ந.க.எண்.2223 /C7 பமேகு ஒபக/ 2027 நாள்: 21.07.2022

2 இவ்வியக்கக செயல்முறைகள் நக.எண்.2223/C7/பமேகு ஒபக 2022 நாள்:13.09.2022, நாள்: 22.09.2022

பார்வை-2ல் காணும் செயல்முறைகளின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம். இம்மாதம் மட்டும் 30.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 6,00 மணி வரை நடத்த அறிவுறுத்தபட்டுள்ளது

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்பதற்கான வழிக்காட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில், கூடுதல் கூட்ட பொருளாக, மாநிலக்கல்வி கொள்கை உருவாக்குதல் சார்ந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாநிலக்கல்வி கொள்கை குறித்த அனைத்து பள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களின் மேலான பார்வை மற்றும் கருதுக்களை சேகரித்து குறிப்பிட்ட Google form/ மூலமாக தொகுத்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.