NVS Recruitment 2022 : நவோதயா பள்ளிகளில் 1616 காலிப்பணியிடங்கள்... கல்வித் தகுதி & விண்ணப்பிப்பது எப்படி? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 4, 2022

NVS Recruitment 2022 : நவோதயா பள்ளிகளில் 1616 காலிப்பணியிடங்கள்... கல்வித் தகுதி & விண்ணப்பிப்பது எப்படி?



NVS Recruitment 2022 : நவோதயா பள்ளிகளில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி முதல்வர் என 1616 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

நவோதயா பள்ளிகளில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி முதல்வர் என 1616 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி வழங்கும் விதமாக மத்திய அரசினால் நவோதயா பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதியினால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது ஒவியம், இசை, நூலகர், உடற்கல்வி போன்ற துறைகளில் பணியாற்ற ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என சுமார் 1616 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? துறை ரீதியான காலிப்பணியிட விபரம் போன்றவைக்குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்..

நவோதயா பள்ளியில் காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 1,616

துறை ரீதியான காலிப்பணியிட விபரங்கள்:
விண்ணப்பிக்கும் முறை:

படி : 1 மேற்கண்ட தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://navodaya.gov.in/nvs/en/Home1 என்ற இணையதளப்பக்கத்திற்குச்க செல்ல வேண்டும்.

படி : 2 பின்னர் முகப்புப்பக்கத்தில் உள்ள recruitment link என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி : 3 இதனையடுத்து அப்பக்கத்தில் வரும் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படைத் தகவலையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்திசெய்ய வேண்டும்.

படி : 4 இதனைத்தொடர்ந்து விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.

படி : 5 இறுதியில் save செய்த பின்னர் விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : பள்ளி முதல்வர் பதவிக்கு ரூ. 2000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1800 மற்றும் இதர துறை ஆசிரியர்களுக்கு ரூபாய் 1500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி வாயிலாகத் தேர்வு நடைபெறும். ( computer based Test). இதில் தேர்வாகும் நபர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் :

பள்ளி முதல்வர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூபாய் 78,800 முதல் ரூ.2,09,200 என நிர்ணயம்

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் – மாதந்தோறும் ரூபாய் 44,900 முதல் 1,42, 400.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்- மாதந்தோறும் ரூபாய் 47,600 முதல் ரூ.1,51, 100.

இதர துறை ஆசிரியர்கள் – ரூ.44, 900 முதல் 1,42,400 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.