NEET தேர்வு விடைக்குறிப்புகள் இணையத்தில் வெளியீடு.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 18, 2022

NEET தேர்வு விடைக்குறிப்புகள் இணையத்தில் வெளியீடு..

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தகுதிகான் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடக்கும் நீட் நுழைவுத்தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இதையும் படிக்க | நீட் தேர்வில் 45 நிமிடங்களுக்கு பின் வினாத்தாள் மாற்றி வழங்கல்: மாணவர்கள் அதிர்ச்சி நீட் 2022 தேர்வு முறையின்படி, நேற்று நடைபெற்ற தேர்வில் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 180 கேள்விகளுக்கு மட்டுமே விண்ணப்பதாரர்கள் பதிலளிக்க வேண்டும். NEET 2022 வினாத்தாளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு, நீட் 2022 தேர்வு காலம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் சரியான பதிலுக்கு +4 மதிப்பெண்களும், தவறான பதிலுக்கு -1 மதிப்பெண் ( அதாவது 1 மதிப்பெண் குறைக்கப்படும். முயற்சிக்கவில்லை என்றால் ( கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்றால் - 0 ) மதிப்பெண் வழங்கப்படாது.

நீட் 2022 தேர்வு முடிவடைந்த பிறகு, பல பயிற்சி நிறுவனங்கள் விடைகுறிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் வெளியிடப்படும் பதில்களை வைத்து விண்ணப்பதாரர்கள் தோராயமான நீட் மதிப்பெண்ணையுன், அவர்களின் செயல்திறனை மதிப்பிட்டுக்கொள்ளலாம். இருப்பினும் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமான NEET UG 2022 விடைக்குறிப்புகளை ( answer keys) வினாத்தாளுடன் பின்னர் வெளியிடும் என்பதை தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது பயிற்சி நிறுவனங்கள், ஏஜென்சிகள் தற்காலிக NEET தேர்வு விடைக்குறிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தேசிய தேர்வு முகமை வெளியிடும் விடைக்குறிப்பின் அடிப்படையிலேயே இறுதி முடிவு தொகுக்கப்படும். நீட் தேர்வு

விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யும் முறை :

படி 1: NEETக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் - neet.nta.nic.in

படி 2: தற்காலிக NEET 2022 விடைக்கான முக்கிய இணைப்பை முகப்புப்பக்கத்தில் கண்டறியவும்.

படி 3: தேவையான விவரங்களை உள்ளிடவும்.

படி 4: NEET UG 2022 விடைக்குறிப்பு திரையில் கிடைக்கும்.

படி 5: NEET 2022 விடைக்குறிப்பைப் பதிவிறக்கி, எதிர்காலக் குறிப்புக்காக அதை அச்சிடவும்.

2 comments:

  1. The NEET (National Eligibility Entrance Test) is the entrance exam for students aspiring to enter medical colleges across India. Every year, the number of students appearing for the exam keeps increasing. Hence, students must work hard and follow a proper timetable to crack the exam and secure a medical seat. There are various neet coaching centres in Chennai. Students can choose the best training institute and join them.

    ReplyDelete
  2. This blog is really simple and presented neatly. Thanks for this blog. This blog is really helpful and the information suggested was awesome. I also heard about Neet coaching centres in Chennai who provide good teaching and training to crack the exam. If you are interested,Visit Them.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.