ஆயக்குடி மரத்தடி மையத்தில் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19.06.2022 ஞாயிறு முதல் ஆரம்பம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 16, 2022

ஆயக்குடி மரத்தடி மையத்தில் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19.06.2022 ஞாயிறு முதல் ஆரம்பம்.

ஆயக்குடி மரத்தடி மையத்தில் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19.06.2022 ஞாயிறு முதல் ஆரம்பம்.

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (NEET) தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency - NTA) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

2022-க்கான நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ஆம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்த தேர்விற்கு சுமார் 19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

இத்தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒரியா, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் கொள்குறி வகை Multiple Choice Questions) தேர்வாக நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் 11, 12-ஆம் வகுப்பு இயற்பியல். வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களிலிருந்து 200 வினாக்கள் கேட்கப்படும் தேர்வாக நடத்தப்படுகிறது. ஆனால் 180 வினாக்களுக்கு விடையளித்தால் போதுமானது.
மொத்தம் 180/200 வினாக்கள் - 720 மதிப்பெண்கள்

சரியாக விடையளிக்கும் ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறாக விடையளித்தால் ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது. நீட் தேர்வு மற்ற போட்டித் தேர்வுகள் போல ஒரு சாதாரண தேர்வே. ஆனால் நீட், நீட் என ஒரு பூதமாக இத்தேர்வை சித்தரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இந்நிலையை மாற்ற ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சு மையத்தின் புதிய முயற்சியாக இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் 19 - 2022-ல் ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர்களின் டாக்டர் கனவை நினைவாக்கும் ஒரு சிறிய முயற்சியாக வகுப்புகள் நடைபெறும். வாரம் வாரம் TNPSC தேர்வுகளைப் போல் இலவச வகுப்புகளும், இலவச குறிப்புகளும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியினை அனைத்து மாணவ, மாணவியர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மையத்தின் சார்பில் வேண்டுகிறோம்.

தொடர்புக்கு : 94863 01705, 7904148183

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.