அரசு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு 'அட்மிஷன்' துவக்கம் எப்போது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 28, 2022

அரசு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு 'அட்மிஷன்' துவக்கம் எப்போது?

It has been announced that the 'online' application registration for the first year admission in government polytechnic colleges will start on July 1.

In Tamil Nadu, there are 51 government polytechnics and 34 government aided polytechnic colleges. Admission to these is conducted through the Directorate of Technical Education, Tamil Nadu.

Counseling will be conducted from July 22. Courses will be assigned. Thereafter, courses for students will be allotted, the Department of Higher Education said. In the coming academic year, new courses are to be introduced in 13 polytechnic colleges. பாலிடெக்னிக் 'அட்மிஷன்' அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூலை 1ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 51 அரசு பாலிடெக்னிக் மற்றும், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றிற்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதன்படி, பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 1ல் ஆன்லைன் பதிவு துவங்கி, ஜூலை 15ல் முடிகிறது.

ஜூலை, 22ல் இருந்து கவுன்சிலிங் நடத்தி, பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படும்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், டிப்ளமா படிப்பில், நேரடி இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 23ல் துவங்கி, ஜூலை 8ல் முடிகிறது. அதன்பின், மாணவர்களுக்கான பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படும் என, உயர் கல்வி துறை தெரிவித்துள்ளது.வரும் கல்வி ஆண்டில், 13 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.