தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 10, 2022

தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு !

தமிழக அரசின் தொழிற் சாலைகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் பெற விண்ணப் பிக்கலாம்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விபத்தில்லா தொழிற் சாலைகள் மற்றும் பெரும் அளவில் விபத்து குறைந்துள்ள தொழிற்சாலைகளுக்கான தமிழக அரசின் மாநில பாதுகாப்பு விருதுகள் மற்றும் விபத்து குறைப்பு, உற்பத்தி திறன் அதிகரிப்பில் புதிய கண்டுபிடிப்பு அல்லது செயல்முறைக்கு தொழிலாளர்களுக்கான உயர்ந்த உழைப்பாளர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சார்ந்த தகுதியான தொழிற்சாலைகள், நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் கடந்த 2019ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்துடன் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அந்ததந்த கோட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களில் மாநில பாதுகாப்பு விருது களுக்கு ஒவ்வொரு திட்டத் திற்கும் ரூ.200க்கான அஞ்சல் ஆணை மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுக்கு ரூ.100க்கான அஞ்சல் ஆணைகளுடன் சமர்ப்பிக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.